• Increase font size
  • Default font size
  • Decrease font size

2014-07-10 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
தொழினுட்ப, வாழ்க்கைத் தொழில் கல்வி மற்றும் பயிற்சி தொடர்பிலான சருவதேச மாநாடு - 2014

- இளைஞர் அலுவல்கள் மற்றும் திறன்கள் அபிவிருத்தி அமைச்சும் ஜேர்மன் அரசும், ஆசிய அபிவிருத்தி வங்கியும் ஏனைய கூட்டுத்தரப்பினரும் உலக வங்கி, கொரிய சர்வதேச ஒத்துழைப்பு முகவராண்மை, சர்வதேச தொழிலாளர் அமைப்பு மற்றும் அவுஸ்ரேலிய அரசாங்கத்தின் வெளிவிவகார மற்றும் விற்பனைத் திணைக்களத்தின் ஒத்துழைப்புடன் அரசாங்கத்தினால் பிரகடனப்படுத்தியுள்ள யூலை மாதம் 15 ஆம் திகதியன்று கொண்டாடப்படவுள்ள "தேசிய திறன்கள் தினம்" கொண்டாடு வதற்காக மேற்போந்த மாநாடு 2014 யூலை 15 ஆம் மற்றும் 16 ஆம் (02) தினங்களில் கொழும்பில் நடத்துவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இந்த மாநாட்டிற்கு இந்தியா பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், நேபாளம், வங்களாதேஷ், ஐக்கிய இராச்சியம், ஜேர்மன், கனடா, மலேசியா, தென்கொரியா, தாய்லாந்து, அவுஸ்ரேலியா மற்றும் செமோவா போன்ற நாடுகளைச் சேர்ந்த நன்மதிப்பைக் கொண்ட தொழில்சார்பாளர்களின் வருகை ஏற்கனவே உறுதிப்படுத்தப்பட்டுள்ளன. இளைஞர் அலுவல்கள் மற்றும் திறன்கள் அபிவிருத்தி அமைச்சர் மாண்புமிகு டலஸ் அழகப்பெரும அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.