• Increase font size
  • Default font size
  • Decrease font size

2014-07-10 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
"தங்களையும் மதித்து அடுத்தவர்களையும் மதிக்கும் சமூகமொன்று"(RYRO) கருத்திட்டம்

- RYRO கருத்திட்டமெனப்படுவது இளைஞர் அலுவல்கள் மற்றும் திறன்கள் அபிவிருத்தி அமைச்சின் கீழ் நடைமுறைப்படுத்துகின்ற தேசிய தொழில்முயற்சி முகாமைத்துவ கல்லூரியினால் நடைமுறைப்படுத்தப்படவுள்ள பாரிய சமூக தாக்கங்களை ஏற்படுத்தக்கூடிய கருத்திட்டமொன்றாகும். இது சமூக அபிவிருத்திக்கு பாதிப்பை ஏற்படுத்துகின்றதும் குழப்பங்களையும் சீரற்ற மனநிலையைக் கொண்ட இருசாரார்களையும் விசேடமாக இளைஞர் யுவதிகளுக்கு தங்களையும் மதித்து அடுத்தவர்களையும் மதிக்கும் தரப்பாக மாற்றுவதற்கு விஞ்ஞானரீதியாக திட்டமிடப்பட்ட நவீன பொறிமுறை யொன்றாகும். இந்தக் கருத்திட்டம் பாடசாலைகள், பல்கலைக்கழகங்கள், உயர் கல்வி நிறுவனங்கள் மற்றும் அரசசார்பற்ற நிறுவனங்கள் தனியார்துறை நிறுவனங்கள் போன்றன உள்ளடங்கலாக சமூகத்தின் சகல தரப்பினர்களிடமும் சென்றடையும். இது தொடர்பில் தொடர் நடவடிக்கைகளை எடுப்பதற்கு இளைஞர் அலுவல்கள் மற்றும் திறன்கள் அபிவிருத்தி அமைச்சர் மாண்புமிகு டலஸ் அழகப்பெரும அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.