• Increase font size
  • Default font size
  • Decrease font size

2014-07-10 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
இரத்தினபுரி மாதிரி இரண்டாம் நிலை பாடசாலையை தாபிப்பதற்காக காணியொன்றை உடைமையாக்குதல்

- சப்பிரகமுவ மாவட்டத்தின் பாடசாலை பிள்ளைகளுக்கு விரிவான கல்வி வசதிகளை வழங்கும் நோக்கில் 6 ஆம் தரம் தொடக்கம் 13 ஆம் தரம் வரையிலான 10 சமாந்தர வகுப்புக்களைக் கொண்ட புதிய தேசிய பாடசாலையொன்றை நிருமாணிக்கும் பொருட்டு இரத்தினபுரி பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள நகர அபிவிருத்தி அதிகார சபைக்குரிய 5.1670 ஹெக்டயார் விஸ்தீரணத்தைக் கொண்ட காணித்துண்டொன்றை கல்வி அமைச்சுக்கு உடைமையாக்கிக் கொள்வதற்கு கல்வி அமைச்சர் மாண்புமிகு பந்துல குணவர்த்தன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.