• Increase font size
  • Default font size
  • Decrease font size

2014-07-10 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
ஹ / தங்காலை மகளிர் மகா வித்தியாலயத்திற்கு தங்காலை டிப்போவுக்கு சொந்தமாக காணியை உடைமையாக்குதல்

- பிரதேச பாடசாலை பிளளைகளுக்குக் கூடுதலான வசதிகளை வழங்கும் நோக்கில் ஹ / தங்கல்லை மகளிர் மகா வித்தியாலயத்தை வேறு இடத்தில் தாபிக்கும் பொருட்டு இலங்கை போக்குவரத்து சபைக்குரிய ஹம்பாந்தோட்டை மாவட்டத்தின் தங்காலை பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள 4 ஏக்கர் 18.7 பேர்ச்சஸ் விஸ்தீரணத்தைக் கொண்ட காணித்துண்டொன்றை கல்வி அமைச்சுக்கு உடைமையாக்கிக் கொள்வதற்கு கல்வி அமைச்சர் மாண்புமிகு பந்துல குணவர்த்தன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.