• Increase font size
  • Default font size
  • Decrease font size

2014-07-10 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
அரசாங்க சுகாதார சேவைக்குத் தேவையான மருந்துகளை கொள்வனவு செய்யும் போது உள்நாட்டு உற்பத்தியாளர்களுக்கு முன்னுரிமை வழங்குதல்

- அரசாங்க வைத்தியசாலைகளுக்கு தேவையாகவுள்ள மொத்த மருந்துகளையும், அரசாங்க மருந்துப்பொருள் கூட்டுத்தாபனத்தினால் வழங்க முடியாத மீதி மருந்துகளையும் அரசாங்க மருந்துப்பொருள் கூட்டுத்தாபனத்தினால் உற்பத்தி செய்யப்படாத ஆயினும், அரசாங்க வைத்தியசாலைக்குத் தேவையான ஏனைய மேற்கத்தேய மருந்து வகைகளயும் உத்தியோகத்தர் குழுவின் இணக்கப்பேச்சின் ஊடாக தீர்மானிக்கப்பட்ட விலைகளுக்கு மேற்கத்தேய மருந்து வகைகளை உள்நாட்டு உற்பத்தியாளர்களிடமிருந்து கொள்வனவு செய்யும் பொருட்டு சுகாதார அமைச்சர் மாண்புமிகு மைத்திரிபால சிறிசேன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.