• Increase font size
  • Default font size
  • Decrease font size

2014-07-10 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
கொழும்பு நகரம் மற்றும் அதற்கண்மித்த பிரதேசங்களில் குறைந்த வசதிகளுடனான குடியிருப்புகளிலும் தற்காலிக வீடுகளிலும் வசிப்பவர்களை வேறு இடங்களில் குடியமர்த்துவதற்கான நிகழ்ச்சித்திட்டம்

- நகர அபிவிருத்தி அதிகார சபையினால் நடைமுறைப்படுத்தும் கொழும்பு நகரத்தின் குறைந்த வருமானத்தைக் கொண்டவர்களை குடியிருப்புகளிலிருந்து வேறு இடங்களுக்கு குடியமர்த்துவதற்கான நிகழ்ச்சித்திட்டத்தை துரிதப்படுத்தவதற்கு அரசாங்கத்தினால் ஆரம்ப நிகழ்ச்சித்திட்டமொன்று மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன் இந்த நிகழ்ச்சித் திட்டத்தின் நோக்கமானது குறைந்த வசதிகளின் கீழ் வசிக்கின்ற மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்கு நவீன வசதிகளைக் கொண்ட குடியிருப்புகளை அவர்களுக்கு வழங்குவதாகும். இந்த நோக்கத்திற்காக 15 மாடிக் கட்டடத்தைக் கொண்ட வீடமைப்புத் தொகுதியொன்றை நிருமாணிப்பதற்கு பாதுகாப்பு, நகர அபிவிருத்தி அமைச்சராக அதிமேதகைய சனாதிபதி அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.