• Increase font size
  • Default font size
  • Decrease font size

2014-07-03 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
டெங்குநோய் தடுப்பு நிகழ்ச்சித்திட்டம் - 2014

- சனாதிபதி செயலணியினால் சுகாதார அமைச்சின் பணியாட்டொகுதியினர்களுக்கு மேலதிகமாக பாதுகாப்பு படையினர்களையும் ஈடுபடுத்தி 2014 யூன் மாதம் 20 ஆம் திகதியிலிருந்து 22 ஆம் திகதி வரையிலான காலப்பகுதிக்குள் கொழும்பு, களுத்தறை மற்றும் கம்பஹா ஆகிய மாவட்டங்களை மையமாகக் கொண்டு நடைமுறைப்படுத்திய டெங்குநோய் தடுப்பு நிகழ்ச்சித்திட்டத்தின் வெற்றி அமைச்சரவையினால் கவனத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. அச்சந்தர்ப்பத்தில் 105,879 மனையிடங்கள் துப்புரவாக்கப்பட்டு, நுளம்பு பரவக்கூடிய இடங்கள் 6,347 கண்டறியப்பட்டு, 3,796 பேர்களுக்கு அறிவிப்பு செய்யப்பட்டு, நுளம்பு பரவும் 1,787 இடங்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளன இந்த நிகழ்ச்சித்திட்டத்தின் இரண்டாம் கட்டம் 2014 யூலை 03 ஆம் திகதியிலிருந்து 10 ஆம் திகதிவரை இந்த மாவட்டங்களில் நடைமுறைப்படுத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளமையினால், தேசிய பிரச்சினையான இந்த பயங்கர டெங்குநோயை முழுமையாக இல்லாதொழிப்பதற்கு பொது மக்களின் பங்களிப்பு ஆகக்கூடுதலாக பெற்றுக் கொள்ளப்பட வேண்டுமென்பதனால் இயைபுள்ள டெங்குநோய் தடுப்பு உத்தியோகத்தர்கள் குழு பரிசோதனை நோக்கங்களுக்காக இல்லங்களுக்கு வரும்போது அவர்களது ஆகக்கூடிய ஒத்துழைப்பை வழங்குமாறு அமைச்சரவையினால் பொதுமக்களிடம் மிக தேவைப்பாட்டுடன் கோரிக்கை விடுக்கப்பட்டது.