• Increase font size
  • Default font size
  • Decrease font size

2014-07-03 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
நுரைச்சோலை லக்விஜய மின் நிலையத்தின் 2 ஆம் 3 ஆம் இலக்க இயந்திரங்களிலிருந்து உற்பத்தி செய்யப்படும் நிலக்கரி சாம்பலை விற்பனை செய்தல்

- புத்தளம் நிலக்கரி மின்நிலைய கருத்திட்டத்தின் கட்டம் II இன் இரண்டாம் அலகின் தொழிற்பாட்டு பணிகள் 2014 ஏப்ரல் மாதம் ஆரம்பிக்கப் பட்டதோடு, இதன் மூன்றாம் அலகின் தொழிற்பாட்டு பணிகள் 2014 செப்ரெம்பர் மாதத்தில் ஆரம்பிக்கப்படவுள்ளது. இந்த மின் நிலையம் இயங்குகையி்ல் தொடர்ச்சியாக உற்பத்தியாகும் சாம்பல் அப்புறப்படுத்துப்பட வேண்டு மென்பததோடு, இவை சீமெந்து உற்பத்தி செயற்பாட்டிற்காகவும் கைத்தொழில் துறையின் வேறு தொழினுட்ப செயற்பாடுகளுக்காகவும் பயன்படுத்தலாம். இயந்திரமொன்றிலிருந்து வருடாந்தம் உற்பத்தியாகும் சாம்பல் அண்ணளவாக 75,000 மெற்றிக் தொன்களாவதோடு, இந்த இரண்டு இயந்திரங்களிலிருந்தும் வருடாந்தம் உற்பத்தி செய்யப்படும் மொத்த அளவு 150,000 மெற்றிக் தொன்களாகும். அங்கீகரிக்கப்பட்ட ஐந்து கம்பனிகளுக்கு இந்த சாம்பல் விற்பனை செய்வதற்காக அமைச்சரவையினால் நியமனஞ் செய்யப்பட்ட கொள்வனவுக் குழுவின் சிபாரிசுக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.