• Increase font size
  • Default font size
  • Decrease font size

2014-07-03 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
கராப்பிட்டிய போதானா வைத்தியசாலையில் குருதி சுத்திகரிப்புப் பிரிவொன்றையும் சீறுநீரக மாற்றுச்சிகிச்சை பிரிவொன்றையும் தாபித்தல்

- காலி கராப்பிட்டிய போதானா வைத்தியசாலையில் குருதி சுத்திகரிப்புப் பிரிவு மற்றும் சீறுநீரக மாற்றுச்சிகிச்சை பிரிவின் மூலம் தென்மாகாண நோயாளிகளுக்கும் அதேபோன்று மொனராகலை மற்றும் இரத்தினபுரி போன்ற அருகிலுள்ள மாவட்டங்களைச் சேர்ந்த நோயாளிகளுக்கும் சேவைகளை வழங்க முடியும். இதற்கமைவாக சிறுநீரக நோயாளிகளுக்கான இரண்டு காவறைகளையும் சிறுநீரக மாற்று சிகிச்சைக்கான அறுவை சிகிச்சை கூடமொன்றையும் தீவிர சிகிச்சைப் பிரிவொன்றையும் சிறுநீரக நோய் பற்றிய ஆராய்ச்சிப் பிரிவையும் உள்ளடக்கி ஐந்து மாடி புதிய கட்டடத் தொகுதியொன்று இந்த வைத்தியசாலையில் நிருமாணிப்பதற்கு பிரேரிக்கப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தத்தை 884.89 மில்லியன் ரூபாவைக் கொண்ட மொத்த செலவில் மத்திய பொறியியல் உசாத்துணை பணியகத்திற்கு வழங்குவதற்காக சுகாதார அமைச்சர் மாண்புமிகு மைத்திரிபால சிறிசேன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.