• Increase font size
  • Default font size
  • Decrease font size

2014-07-03 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
ஆசியநாடுகளுக்கிடையில் பரஸ்பர உறவுகளை ஏற்படுத்தல் உட்பட நம்பிக்கையைக் கட்டியெழுப்புதல் மீதான நடவடிக்கை பற்றிய 4 ஆவது உச்சி மாநாட்டில் (CICA) கலந்து கொள்வதன் பொருட்டு சீனாவிலுள்ள ஷங்காய் நகரத்துக்கு அதிமேதகைய சனாதிபதி அவர்களினால் மேற்கொள்ளப்பட்ட விஜயம்

- அதிமேதகைய சனாதிபதி அவர்களின் தலைமையின் கீழ் பிரதிநிதிகள் குழுவொன்று மேற்போந்த மாநாட்டில் கலந்து கொண்டது. இந்த மாநாட்டில் உரையாற்றிய அதிமேதகைய சனாதிபதி அவர்கள் ஆசிய நாடுகளின் கவனத்தை, சருவதேச ரீதியில் அதிக முக்கியத்துவமான வலயம் மற்றும் வெளிவாரி மூலங்கள் ஆகிய இரண்டு விதத்திலும் பல்வகையான வாய்ப்புகளையும் சவால்களையும் ஏற்படுத்தும் செயற்பாட்டு ரீதியிலான வலயமொன்றாக. வெளிவாரி சக்திகள் சனநாயகம் என்னும் பெயரில் தன்னாதிக்கம் கொண்ட நாடுகளின் உள்விவகாரங்களில் தலையிடுதல் நாடுகளிலும் வலயங்களிலும் நிலையற்ற தன்மையை உருவாக்குவதற்கு காரணமாய் அமைந்துள்ளதெனவும் குறிப்பிட்டார். ஐக்கிய நாடுகள் அமைப்பின் செயலாளர் நாயகத்துடன் மேற்கொள்ளப்பட்ட கலந்துரையாடல்களின் போது செயலாளர் நாயகம் இலங்கையில் நடாத்தப்பட்ட உலக இளைஞர்கள் மாநாடு வெற்றிகரமாக பூர்த்தி செய்யப்பட்டமை சம்பந்தமாக இலங்கைக்கு தனது நல்வாழ்த்துக்களைத் தெரிவித்ததோடு, நாடு பொருளாதார சமூக அபிவிருத்தியின் பால் பாரிய முன்னேற்றத்தை அடைந்துள்ளதெனவும் குறிப்பிட்டார். இந்த தகவல்கள் மேற்போந்த தகவல்கள் மாண்புமிகு (பேராசிரியர்) ஜீ.எல்.பீரிஸ் அவர்களினால் அமைச்சரவைக்குச் சமர்ப்பிக்கப்பட்டது.