• Increase font size
  • Default font size
  • Decrease font size

2014-06-19 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
பல்கலைக்கழங்களில் நிருமாணிக்கப்படுகின்ற கட்டடங்களுக்கான ஒப்பந்தங்களை வழங்குதல்

- அமைச்சரவையினால் நியமனஞ் செய்யப்பட்ட நிலையியற் கொள்வனவுக் குழுவினால் சிபாரிசு செய்யப்பட்டுள்ளவாறு பல்கலைக்கழங்களில் பின்வரும் நிருமாணிப்பின் ஒப்பந்தங்களை வழங்குவதற்காக உயர் கல்வி அமைச்சர் மாண்புமிகு எஸ்.பீ.திசாநாயக்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.

* கிழக்கு பல்கலைக்கத்தின் திருகோணமலை வளாகத்தின் செயல்முறை விஞ்ஞான பீடத்திற்கான . ஐந்து மாடி கட்டடத் தொகுதி - ரூபா 331,945,891.63 மொத்த செலவினத்திலும்.

* கிழக்கு பல்கலைக்கழகத்தின் திருகோணமலை வளாகத்தின் தகவல் தொழினுட்பட நிலையத்திற்கான ஐந்து மாடி கட்டடத் தொகுதி - ரூபா 253,767,500.00 மொத்த செலவினத்திலும்.

* கிழக்கு பல்கலைக்கத்தின் திருகோணமலை வளாகத்தின் நூலகத்திற்கான நான்கு மாடி கட்டடத் தொகுதி - ரூபா 271,003,625.00 மொத்த செலவினத்திலும்.

* பேராதனை பல்கலைக்கத்தின் கமத்தொழில் பீடத்தை அபிவிருத்தி செய்தல் - ரூபா 797,292,344.98 மொத்த செலவினத்திலும்.; அத்துடன்

* மொறட்டுவை பல்கலைக்கத்தின் தகவல் தொழினுட்ப பீடத்தின் கட்டம் - II இற்கான கட்டடத் தொகுதி - ரூபா 127,760,923.99 மொத்த செலவினத்திலும்.