• Increase font size
  • Default font size
  • Decrease font size

2014-06-19 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
காத்தான்குடி கழிவுநீர் அகற்றல் கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துதல்

- இந்தக் கருத்திட்டம் சீன அரசாங்கத்தினால் வழங்கப்படும் நிதி உதவி இலங்கை அரசாங்கத்தினால் வகிக்கப்படவுள்ள பங்களிப்பு என்பவற்றின் மூலம் செயற்படுத்தப்படவுள்ளது. அமைச்சரவையினால் நியமனஞ் செய்யப்பட்ட நிலையியற் கொள்வனவுக் குழுவினால் சிபாரிசு செய்யப்பட்டுள்ளவாறு மேற்போந்த கருத்திட்டத்தின் ஒப்பந்தத்தை 69,422,744 ஐக்கிய அமெரிக்க டொலர்கள் உட்பட 1,225,957,379 ரூபாவைக் கொண்ட தொகைக்கு வழங்குவதற்காக நீர் வழங்கல், வடிகாலமைப்பு அமைச்சர் மாண்புமிகு தினேஷ் குணவர்த்தன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.