• Increase font size
  • Default font size
  • Decrease font size

2014-06-19 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
உகண்டாவின் கம்பாலா நகரத்தில் 2014 பெப்ரவரி மாதம் 10 ஆம் திகதியிலிருந்து 13 ஆம் திகதி வரையிலான நான்கு நாட்கள் நடாத்தப்பட்ட தேசிய அபிவிருத்திக் கட்டமைப்பிற்குள் எழும் குடிப்பெருக்க பிரச்சினையை தீர்ப்பதற்கு ஆசிய ஆபிரிக்க பாராளுமன்ற உறுப்பினர்களின் ஆற்றல் அபிவிருத்திக் கருத்திட்டம்

- 2014 பெப்ரவரி மாதம் 10 ஆம் திகதியிலிருந்து 13 ஆம் திகதி வரை உகண்டாவின் கம்பாலா நகரத்தில் நடாத்தப்பட்ட மேற்போந்த மாநாட்டிற்கு சிறுவர் அபிவிருத்தி, மகளிர் விவகார அமைச்சர் மாண்புமிகு திஸ்ஸ கரலியத்த அவர்கள் கலந்து கொண்டார். இந்த மாநாட்டின் காம்போஜியா சம்மேளனத்தில் கலந்துரையாடப்பட்ட விடயங்களை தொடர்ந்தும் கலந்துரையாடுவதற்கும் பிற புதிய கருத்துக்களை சமர்ப்பிப்பதற்காகும். இலங்கையில் ஆண், பெண் சமத்துவம் பற்றி மாண்புமிகு அமைச்சரினால் பிரதிநிதிகளுக்கு தெளிவுபடுத்தப்பட்டது. ஆண், பெண் வேறுபாடின்றி நாட்டின் சகல மக்களுக்கும் சம உரிமை இலங்கை அரசியலமைப்பின் ஊடாக உறுதி செய்யப்பட்டுள்ளது. சனப்பெருக்கம், கல்வி, சுகாதார சேவை போன்ற துறைகளில் இலங்கை அடைந்துள்ள வெற்றி மற்றும் ஆண், பெண் சமத்துவத்தின் பால் மேற்கொண்டுள்ள சார்பு நடவடிக்கைகள் பிரதிநிதிகளினால் மெச்சப்பட்டன. சிறுவர் அபிவிருத்தி, மகளிர் விவகார அமைச்சர் மாண்புமிகு திஸ்ஸ கரலியத்த அவர்களினால் மேற்போந்த தகவல்கள் அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கப்பட்டது.