• Increase font size
  • Default font size
  • Decrease font size

2014-06-19 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
அதிமேதகைய சனாதிபதி அவர்களின் பஹரேன் இராச்சியத்திற்கான உத்தியோகபூர்வ விஜயம்

- பஹரேன் இராச்சியத்தின் மன்னரின் அழைப்பின் பேரில் உயர்மட்ட பிரதிநிதிகளுடன் அதிமேதகைய சனாதிபதி அவர்கள் அந்நாட்டிற்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டதோடு, இது இலங்கை அரச தலைவர் ஒருவரினால் பஹரேன் நாட்டிற்கு மேற்கொண்ட முதலாவது உத்தியோகபூர்வ விஜயமாகும். இங்கு நடாத்தப்பட்ட உத்தியோகபூர்வ கூட்டங்களில் இருநாட்டு தலைவர்களினாலும் விரிவாக வெளித்தெரியும் இருபக்க விடயங்களையும் அதேபோன்று பரஸ்பர மற்றும் பல்புடை விடயங்களும் கலந்துரையாடப்பட்டன. பதில் வெளிவிவகார அமைச்சர் மாண்புமிகு ஜீ.ஜே.எல்.நியோமால் பெரேரா அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.