• Increase font size
  • Default font size
  • Decrease font size

2014-06-19 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
2014 ஏப்ரல் மாதம் 07 ஆம் திகதி முதல் 13 ஆம் திகதி வரையிலான காலப்பகுதிக்குள் வொஷிங்டன் நகரில் நடைபெற்ற 2014 ஆம் ஆண்டிற்கான உலக வங்கி / சருவதேச நாணய நிதியத்தின் அரையாண்டுக்கான கூட்டம்

- சர்வதேச நாணய ஒத்துழைப்பு பற்றிய (சிரேட்ட) அமைச்சரும் பிரதி நிதி, திட்டமிடல் அமைச்சருமான மாண்புமிகு (கலாநிதி) சரத் அமுனுகம அவர்களினால் தலைமை தாங்கப்பட்டதும் பொதுத் திறைசேரியின் சிரேட்ட உத்தியோகத்தர்களையும் மத்திய வங்கியின் உத்தியோகத்தர்களையும் கொண்ட பிரதிநிதிகளும் இலங்கை பிரதிநிதித்துவப்படுத்தினார்கள். இங்கு தொழில் இன்மையைக் குறைத்தல், பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தல், நிதிச் சந்தையில் வெற்றி போன்றவற்றில் இலங்கை அண்மைக் காலத்தில் காட்டிய செயலாற்றுகை சருவதேச நாணய நிதியத்தினால் மெச்சப்பட்டதோடு, இந்த நிதியத்தினால் இலங்கைக்கு தொடர்ந்தும் ஒத்தாசை வழங்குவது பற்றியும் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. சர்வதேச நாணய ஒத்துழைப்பு பற்றிய (சிரேட்ட) அமைச்சர் மாண்புமிகு (கலாநிதி) சரத் அமுனுகம அவர்களினால் மேற்போந்த தகவல்கள் அமைச்சரவைக்குச் சமர்ப்பிக்கப்பட்டது.