• Increase font size
  • Default font size
  • Decrease font size

2014-06-19 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
2014 மே மாதம் 02 ஆம் திகதி முதல் 05 ஆம் திகதி வரை கசகஸ்தானின் அஸ்தானாவில் நடாத்தப்பட்ட ஆசிய அபிவிருத்தி வங்கியின் 47 ஆவது வருடாந்த மாநாடு

- சர்வதேச நாணய ஒத்துழைப்பு பற்றிய (சிரேட்ட) அமைச்சரும் பிரதி நிதி, திட்டமிடல் அமைச்சருமான மாண்புமிகு (கலாநிதி) சரத் அமுனுகம அவர்களினால் தலைமை தாங்கப்பட்டதும் பொதுத் திறைசேரியின் சிரேட்ட உத்தியோகத்தர்களைக் கொண்ட பிரதிநிதிகளும் மேற்போந்த மாநாட்டில் இலங்கை பிரதிநிதித்துவப்படுத்தினார்கள். ஆசிய அபிவிருத்தி வங்கியின் தலைவர் ஆசிய அபிவிருத்தி வங்கியின் தெற்காசிய வலயத்தின் பணிப்பாளர் நாயகம் ஆகியோர்களுடன் இந்த பிரதிநிதிகளினால் மேற்கொள்ளப்பட்ட கூட்டங்களின் போது கடந்த ஆண்டில் இலங்கையினால் சிறந்த முதலீட்டு செயலாற்றுகை பதிவு செய்யப்பட்டமை எடுத்துக் காட்டப்பட்டது. அத்துடன் இருநாடுகளுக்குமிடையில் இருபக்க உறவுகளை மேலும் பலப்படுத்துவதற்காக சீன முதலீட்டாளர்களை இலங்கைக்கு கூடுதலாக ஈர்த்துக் கொள்ளுதல் சம்பந்தமாக பயனுள்ள இருபக்க கலந்துரையாடல்கள் சீன மக்கள் குடியரசின் தலைவர்களுடன் நடாத்தப்பட்டுள்ளது. சர்வதேச நாணய ஒத்துழைப்பு பற்றிய (சிரேட்ட) அமைச்சரும் பிரதி நிதி, திட்டமிடல் அமைச்சருமான மாண்புமிகு (கலாநிதி) சரத் அமுனுகம அவர்களினால் மேற்போந்த தகவல்கள் அமைச்சரவைக்குச் சமர்ப்பிக்கப்பட்டது