• Increase font size
  • Default font size
  • Decrease font size

2014-06-19 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
கப்பற்சேர்மம் ஒன்றை உருவாக்குவதன் மூலம் வரையறுக்கப்பட்ட இலங்கை கப்பற் கூட்டுத்தாபனத்தைப் பலப்படுத்துதல்

- நாட்டிற்காக இறக்குமதி செய்யப்படும் நிலக்கரி, மசகு எண்ணெய் போன்றவற்றை கடல் மார்க்கமாக ஏற்றியிறக்கும் பணிகளை வரையறுக்கப்பட்ட இலங்கை கப்பற் கூட்டுத்தாபனத்திற்கு மாத்திரம் கையளிக்கும் நோக்கில் வரையறுக்கப்பட்ட இலங்கை கப்பற் கூட்டுத்தாபனத்தின் கப்பற் சேர்மத்தைப் பலப்படுத்துவதற்காக துறைமுகங்கள், நெடுஞ்சாலைகள். கப்பற்றுறை அமைச்சராக அதிமேதகைய சனாதிபதி அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.