• Increase font size
  • Default font size
  • Decrease font size

2014-06-19 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
துருக்கி தகவல் தொலைத்தொடர்புகள் தொழினுட்ப அதிகாரசபைக்கும் (ICTA) இலங்கை தொலைத்தொடர்புகள் ஒழுங்குறுத்துகை ஆணைக்குழுவுக்கும் (TRCSL) இடையே கைச்சாத்திடப்படும் புரிந்துணர்வு உடன்படிக்கை (MoU)"

- இந்த புரிந்துணர்வு உடன்படிக்கையின் மூலம் இலங்கையிலும் அதேபோன்று துருக்கியிலும் தொலைத்தொடர்பு அபிவிருத்திக்கு பங்களிக்கும் நோக்குடன் தொழினுட்ப மற்றும் நிறுவன ஒத்துழைப்புக்கான பொறிமுறையொன்றை வழங்குகின்றது. இதில் தொழினுட்ப அபிவிருத்தி, தொலைதொடர்பு சேவைகளுக்கு அனைவரினதும் பங்கு, இணையத்தளம் போன்ற துறைகளில் விசேட பங்களிப்பு எதிர்பார்க்கப்படுகின்றது இலங்கை தொலைத்தொடர்புகள் ஒழுங்குறுத்துகை ஆணைக்குழுவுக்கும் துருக்கி தகவல் தொலைத்தொடர்புகள் தொழினுட்ப அதிகாரசபைக்கும் இடையே புரிந்துணர்வு உடன்படிக்கையொன்றைச் செய்து கொள்வதற்காக அதிமேதகைய சனாதிபதி அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.