• Increase font size
  • Default font size
  • Decrease font size

2014-06-05 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
வைத்தியசாலைகளில் சிகிச்சைக் கழிவு முகாமைத்துவ வகைமுறைகளை நிறுவுதல்

- சிகிச்சைக் கழிவுகள் சுற்றுச் சூழலுக்கும் அதேபோன்று அதற்கண்மித்த பிரதேசவாழ் மக்களுக்கும் தீங்குவிளைவிக்கின்றமையினால், சிகிச்சைக் கழிவு முகாமைத்துவத்தின்பால் அரசாங்கம் கூடிய கவனம் செலுத்தியுள்ளது. வைத்தியசாலைகளில் சிகிச்சை கழிவு முகாமைத்துவத்துக்கான பாதுகாப்பான வழிமுறைகளை மேம்படுத்தும் நோக்குடன் சுகாதார அமைச்சினால் 18,444,571.45 ஐக்கிய அமெரிக்க டொலர்களைக் கொண்ட செலவில் தெரிவு செய்யப்பட்ட வைத்தியசாலைகளில் சிகிச்சை கழிவு முகாமைத்துவ வகைமுறைகளை தாபிப்பதற்காக அவுஸ்திரேலிய ஒப்பந்தக்காரருடன் வர்த்தக ஒப்பந்தமொன்று செய்து கொள்ளப்பட்டுள்ளது. இந்த நிதியிடுகை சார்ந்த பணிகளிளை நடாத்திச் செல்வதற்காக நிதி, திட்டமிடல் அமைச்சராக அதிமேதகைய சனாதிபதி அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.