• Increase font size
  • Default font size
  • Decrease font size

2014-06-05 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
அனுராதபுர புத்தசிராவக்க பிக்குகள் பல்கலைக்கழகத்தை மீள் நிறுவுவதன் கீழ் நூலகத்திற்கான நான்கு மாடி கட்டடமொன்றை நிருமாணித்தல்

- அமைச்சரவையினால் நியமனஞ் செய்யப்பட்ட நிலையியல் கொள்வனவுக் குழுவினால் சிபாரிசு செய்யப்பட்டுள்ளவாறு 298,273,258.00/- ரூபாவைக் கொண்ட தொகைக்கு ஆகக்குறைந்த அனுசரணையான மதிப்பீட்டு விலையை முன்வைத்த கேள்விதாரருக்கு மேற்போந்த ஒப்பந்தத்தை வழங்குவதற்காக உயர் கல்வி அமைச்சர் மாண்புமிகு எஸ்.பீ.திசாநாயக்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.