• Increase font size
  • Default font size
  • Decrease font size

2014-06-05 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
இலங்கை தெங்கு உற்பத்திகளை ஏற்றுமதி செய்வதற்கான குறியீட்டு வழிமுறையொன்றைத் தாபித்தல்

- தெங்கு கைத்தொழில் துறை சார்ந்த ஏற்றுமதி பொருட்களுக்கு குறியீட்டு வழிமுறையொன்றைப் பயன்படுத்துவதன் மூலம் இந்த பொருட்களுக்கு இலங்கையின் அடையாளம் தெரியும் விதத்தில் விளம்பரம் செய்வதற்கும் உற்பத்தியின் உயர் தரம் பற்றி நுகர்வோருக்கு தெளிவுப்படுத்துவதற்கும் இலகுவாக அமையுமென கவனத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இதற்கமைவாக உள்நாட்டு தெங்கு உற்பத்திகளின் தரத்தினையும். தனிச்சிறப்பினையும் உறுதிப்படுத்தும் பொருட்டு "Sri Lanka Coconet" என்னும் குறியீட்டுப் பெயரை இட்டு போட்டிகரமான பயனுள்ள நிலமையை உருவாக்கி புதிய சந்தையில் நுழைவதற்கான நிகழ்ச்சித்திட்டமொன்றை நடைமுறைப் படுத்துவதற்காக தெங்கு அபிவிருத்தி, மக்கள் தோட்ட அபிவிருத்தி அமைச்சர் மாண்புமிகு ஜகத் புஷ்பகுமார அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.