• Increase font size
  • Default font size
  • Decrease font size

2014-06-05 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
கிளிநொச்சியிலுள்ள யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் கமத்தொழில் பீடத்தையும் பொறியியல் பீடத்தையும் அபிவிருத்தி செய்வதற்காக இந்திய அரசாங்கத்தினால் சிறிய அபிவிருத்தி கருத்திட்ட கொடை வசதிகளை வழங்குதல்

- கிளிநொச்சியிலுள்ள யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் கமத்தொழில் பீடத்தையும் பொறியியல் பீடத்தையும் அபிவிருத்தி செய்வதற்காக இந்திய அரசாங்கத்திற்கும் இலங்கை அரசாங்கத்திற்கும் இடையில் செய்து கொள்ளப்பட்டதும் திருத்தப்பட்டதுமான புரிந்துணர்வு உடன்படிக்கையை நடைமுறைப்படுத்துவதற்காக உயர் கல்வி அமைச்சர் மாண்புமிகு எஸ்.பீ.திசாநாயக்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.