• Increase font size
  • Default font size
  • Decrease font size

2014-06-05 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
சேதனப் பொருள் ஏற்றுமதி கட்டுப்பாட்டுக்கான சுயாதீன பிரிவொன்றைத் தாபித்தல்

- சேதனப் பொருள் உற்பத்தி ஏற்றுமதியை கட்டுப்படுத்துவதற்கான பிரிவொன்றை இலங்கை ஏற்றுமதி அபிவிருத்தி சபையின் கீழ் தாபிப்பதற்கும் இந்த நோக்கத்திற்காக 1979 ஆம் ஆண்டின் 40 ஆம் இலக்க ஏற்றுமதி அபிவிருத்தி சட்டத்தின் கீழ் தயாரிக்கப்பட்ட ஒழுங்குவிதிகளை வர்த்தமானியில் பிரசுரிப்பதற்காக கைத்தொழில், வர்த்தக அலுவல்கள் அமைச்சர் மாண்புமிகு அப்துல் றிஷாத் பதியுதீன் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.