• Increase font size
  • Default font size
  • Decrease font size

2014-05-19 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
உள்நாட்டு வங்கிகளின் கடன்தொகைகளைப் பயன்படுத்தி முன்னுரிமை வீதிகளை புனரமைத்தல்

- பின்வரும் வீதிப்பகுதிகளை புனரமைப்பதற்கும் மேம்படுத்துவதற்குமாக உள்நாட்டு வங்கிகளுடன் கடன் உடன்படிக்கைகளைச் செய்து கொள்வதற்காக நிதி, திட்டமிடல் அமைச்சராக அதிமேதகைய சனாதிபதி அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.

* பழைய கொழும்பு - காலி வீதி (ஏ 2) 17.50 கிலோ மீற்றரிலிருந்து 25.20 கிலோ மீற்றர் வரை ;

* பிபில - ஊரனிய - மஹியங்கனை வீதி (பீ 57) 0.00 கிலோ மீற்றரிலிருந்து 10.00 கிலோ மீற்றர் வரையும் 18.00 கிலோ மீற்றரிலிருந்து 22.00 கிலோ மீற்றர் வரையும் ;

* மல்லவபிட்டிய - ரம்பொடகல்ல - கெப்பிட்டிபொல வீதி (பீ 264) 0.00 கிலோ மீற்றரிலிருந்து 15.75 கிலோ மீற்றர் வரையும் 20.25 கிலோ மீற்றரிலிருந்து 37.81 கிலோ மீற்றர் வரையும் ;

* எம்பிலிபிட்டிய - மொரக்கெட்டிய - கிரிஇப்பன்ஆர - உடமவ்ஆர வீதி (பீ 549) 6.12 கிலோ மீற்றரிலிருந்து 14.84 கிலோ மீற்றர் வரை ;

* வெலிகந்த - பூந்தல - கிரிந்த வீதி 0.00 கிலோ மீற்றரிலிருந்து 19.20 கிலோ மீற்றர் வரை; அத்துடன்

* தங்கல்லை - கந்துருபொக்குன - பெலியத்தை - கந்துருபொக்குன - தெத்தூவாவெல வீதி 0.00 கிலோ மீற்றரிலிருந்து 12.76 கிலோ மீற்றர் வரை.