• Increase font size
  • Default font size
  • Decrease font size

2014-05-19 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
கேகாலை மாவட்டத்தின் தெஹிஓவிட்ட பிரதேச செயலாளர் பிரிவின் பட்டங்கல பிரதேசத்தில் தாபிப்பதற்கு பிரேரிக்கப்பட்டுள்ள பல்கலைக்கழக கல்லூரியின் நிருமாணிப்பு பணிகளையும் கம்பஹா மாவட்டத்தின் சப்புகஸ்கந்தவில் ஏற்கனவேயுள்ள பயிற்சி நிலையத்தை பல்கலைக்கழக கல்லூரியாக நவீனமயப்படுத்துவதற்கும் மேம்படுத்துவதற்குமான பணிகளையும் மத்திய பொறியியல் உசாத்துணை பணியகத்திற்கு (CECB) கையளித்தல்

- பின்வரும் கருத்திட்டங்களின் நிருமாணிப்பு பணிகள் அதாவது -

* கேகாலை மாவட்டத்தின் பட்டங்கல பல்கலைக்கழக கல்லூரியின் நிருமாணிப்பு பபணிகளை 259.94 மில்லியன் ரூபாவைக் கொண்ட செலவில் மத்திய பொறியியல் உசாத்துணை பணியகத்திற்கும்; அத்துடன்

* கம்பஹா மாவட்டத்தின் சபுகஸ்கந்த பிரதேசத்திலுள்ள தேசிய இளைஞர் சேவைகள் சபையின் பயிற்சி நிலையத்தை பல்கலைக்கழக கல்லூரியொன்றாக மாற்றுவதற்கும் அதனை நவீனமயப்படுத்தி அபிவிருத்தி செய்யும் பணிகளை 153.64 மில்லியன் ரூபாவைக் கொண்ட மொத்த செலவில் திறந்த கேள்வி செயல்முறையின் மூலம் தெரிவுசெய்யப்பட்ட

பொருத்தமான ஒப்பந்தக்காரர் ஒருவருக்கும்; வழங்குவதற்காக இளைஞர் அலுவல்கள் மற்றும் திறன்கள் அபிவிருத்தி அமைச்சர் மாண்புமிகு டலஸ் அழகப்பெரும அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.