• Increase font size
  • Default font size
  • Decrease font size

2014-05-19 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
இலங்கையில் புற்று நோயாளிகளுக்கு உயர்தரத்திலான அதிசக்திவாய்ந்த கதிர்வீச்சு சிகிச்சை உபகரணங்களையும் உரிய உட்கட்டமைப்பு வசதிகளையும் வழங்குவதற்கான கருத்திட்டம்

- இந்த நோக்கம் சார்பில் முன்னுரிமை அடிப்படையில் கண்டறியப்பட்ட இங்கு கீழ் குறிப்பிடப்படும் முதல் ஐந்து வைத்தியசாலைகளில் ஊடுகதிர் காப்பு கொங்கிறீட் பங்கர்களை நிருமாணிக்கும் ஒப்பந்தத்தை 1,103,061,593.82/- ரூபாவைக் கொண்ட மதிப்பீட்டு செலவில் மத்திய பொறியியல் உசாத்துணை பணியகத்திற்கு வழங்குவதற்காக சுகாதார அமைச்சர் மாண்புமிகு மைத்திரிபால சிறிசேன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.

* மஹரகம தேசிய புற்றுநோய் நிறுவனம்.
* யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை.
* கராபிட்டிய போதனா வைத்தியசாலை.
* கண்டி போதனா வைத்தியசாலை.
* மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை.