• Increase font size
  • Default font size
  • Decrease font size

2014-05-19 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
கற்றுக்கொண்ட பாடங்கள் நல்லிணக்க ஆணைக்குழுவின் சிபாரிசுகளை நடைமுறைப்படுத்து தல் - வவுனியா மற்றும் மன்னார் மாவட்டங்களில் நீண்ட காலமாக இடம்பெயர்ந்துள்ள மக்களை மீளக் குடியமர்த்தும் நடவடிக்கைகளை துரிதப்படுத்தும் அரசாங்கத்தின் முன்னுரிமை நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் கல்வித் துறைக்கான உட்கட்டமைப்பு வசதிகளை வழங்கும் பொருட்டு வவுனியா காமினி மகாவித்தியாலயத்தை தேசிய பாடசாலையாக பிரகடனப்படுத்துதலும் வவுனியா போகஸ்வெவ வித்தியாலயத்திற்கு உட்கட்டமைப்பு வசதிகளை வழங்குதலும்

- சில காலத்திற்கு முன்னர் நிலவிய பிரச்சினையான நிலமை காரணமாக இடம்பெயர்ந்த வவுனியா மற்றும் மன்னார் மாவட்டங்களில் மீளப்பணிக்கமர்த்தப்பட்ட அதிகளவான பிள்ளைகளுக்கு மிகச்சிறந்த கல்வி வசதிகளை ஏற்பாடு செய்வதற்காக வவுனியா காமினி மகாவித்தியாலயத்தை தேசிய பாடசாலையாக தரம் உயர்த்துவதற்கும் வவுனியா போகஸ்வெவ வித்தியாலயத்திற்கு இரண்டு மாடி கட்டடடமொன்றை நிருமாணிப்பதற்கும் இந்த பாடசாலைக்கு தேவையான சகல அடிப்படை வசதிகளையும் உபகரணங்களையும் வழங்குவதற்குமாக கல்வி அமைச்சர் மாண்புமிகு பந்துல குணவர்த்தன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. இந்தக் கருத்திட்டத்தின் இரண்டாம் கட்டத்தில் சிங்களம் மற்றும் தமிழ் மாணவர்களுக்கு ஒரே பாடசாலையில் ஒன்றாக கற்பதற்கான வாய்ப்பினை வழங்கி மன்னார் மாவட்டத்திலுள்ள தேசிய பாடசாலைகள் ஐந்திலிருந்து பொருத்தமான தேசிய பாடசாலையொன்றை 2015 ஆம் ஆண்டிலிருந்து மும்மொழி பாடசாலையொன்றாக அபிவிருத்தி செய்வதற்காக தேர்ந்தெடுக்கப்படும்.