• Increase font size
  • Default font size
  • Decrease font size

2014-05-19 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
அணுசக்தி அதிகாரசபையின் சேதம் விளைவிக்காத பரிசோதனை தொடர்பிலான தேசிய நிலையத்திடமிருந்து சேதம் விளைவிக்காத பரிசோதனை சேவைகளை பெற்றுக் கொள்ளல்

- சேதம் விளைவிக்காத பரிசோதனை என்னும் போது உலோக அத்துடன் உலோகமற்ற (கொங்கிறீட்) கட்டமைப்புகளை, இந்த கட்டமைப்புகளுக்கு சேதம் ஏற்படாதவாறு பௌதீக ரீதியில் பரிசோதனை செய்யும் வழிமுறையாகும். இது ஏதேனும் உற்பத்தியொன்று குறைபாடற்றதா என்பதை மதிப்பிடுவதற்காக கைத்தொழிற்துறையில் பரவலாக பயன்படுத்தப்படும் வழிமுறையொன்றாகும். சேதம் விளைவிக்காத பரிசோதனை மற்றும் அதனோடிணைந்த சேவைகளின் மூலம் கைத்தொழில் உற்பத்திகளின் தரம் உறுதிப்படுத்தப்படுவதோடு, இதன் காரணமாக கைத்தொழிலின் வினைத்திறனுக்கு இது பங்களிப்பு வழங்குகின்றது. சகல அரசாங்க நிறுவனங்கள், நியதிச்சட்ட சபைகள், கூட்டுத்தாபனங்கள் ஆகியன சேதம் விளைவிக்காத பரிசோதனைகளை "சேதம் விளைவிக்காத பரிசோதனை தொடர்பிலான தேசிய நிலையத்திடமிருந்து" பெற்றுக் கொள்ள வேண்டுமென தொழில்நுட்ப, ஆராய்ச்சி, அணுசக்தி அமைச்சர் மாண்புமிகு பாட்டலி சம்பிக்க றணவக்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.