• Increase font size
  • Default font size
  • Decrease font size

2014-05-08 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் வடக்கு கிழக்கு உள்ளூராட்சிச் சேவைகளை மேம்படுத்தும் (புரநெகும) கருத்திட்டத்திற்காக உலக வங்கியின் மூலம் நிருவகிக்கப்படுகின்ற அரசிறை விவகார மற்றும் வர்த்தகம் பற்றிய அவுஸ்திரேலிய திணைக்களத்திலிருந்து 18.8 மில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர்கள் கொண்ட கடனுதவி

- வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் உள்ளூராட்சி நிறுவனங்களுக்கு அவற்றின் சேவைகளையும் உட்கட்டமைப்பு வசதிகளையும் மேம்படுத்துவதற்கு ஒத்தாசை நல்கும் பொருட்டு அரசாங்கத்தினால் வடக்கு மற்றும் கிழக்கு உள்ளூராட்சி சேவைகளை மேம்படுத்தும்(புரநெகும) கருத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது. இந்தக் கருத்திட்டத்தின் மூலம் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களிலுள்ள 65 பிரதேச சபைகளும் 12 நகர சபைகளும் 03 மாநகர சபைகளும் உள்ளடக்கப்படுகின்றன. 18.8 மில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர்கள் கொண்ட உத்தேச நிதியுதவி தற்போது நடைமுறையிலுள்ள (புரநெகும) கருத்திட்டம் அண்மையிலுள்ள மொனறாகலை, பொலன்நறுவை, அநுராதபுரம், புத்தளம் ஆகிய மாவட்டங்களிலுள்ள மேலதிக 22 உள்ளூராட்சி நிறுவங்களுக்கும் விரிவுபடுத்துவதற்காகப் பயன்படுத்தப்படும். செய்து கொள்ளப்படவுள்ள உடன்படிக்கை மற்றும் அது சார்ந்த விடயங்களுக்குரிய பணிகளை மேற்கொள்வதற்காக நிதி, திட்டமிடல் அமைச்சராக அதிமேதகைய சனாதிபதி அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.