• Increase font size
  • Default font size
  • Decrease font size

2014-05-08 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
2008 ஆம் ஆண்டின் 14 ஆம் இலக்க திறமுறை அபிவிருத்திக் கருத்திட்ட (திருத்த) சட்டத்தின் 3(3) ஆம் பந்தியின் கீழான அறிவித்தல்

- கொழும்பு 03, ஆர்.ஏ. த மெல் மாவத்தையில் கலப்பு அபிவிருத்தி கருத்திட்டமொன்றை தாபிப்பதற்கான பிரேரிப்பு - சுற்றுலாத்துறை வசதிகளை ஏற்பாடு செய்யும் பொருட்டு வெளிநாட்டு கம்பனியொன்றினால் 250 மில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர்கள் கொண்ட முதலீட்டில், வீடமைப்புத் தொகுதிகள் மற்றும் வாகனத் தரிப்பிடம் போன்ற வசதிகளுடன் கூடிய வர்த்தக நடவடிக்கைகளுக்கான இடவசதியுள்ள கலப்பு அபிவிருத்திக் கருத்திட்டமொன்றை கொழும்பு 03, ஆர்.ஏ. த மெல் மாவத்தையில் தாபிப்பது சம்பந்தமாக 2008 ஆம் ஆண்டின் 14 ஆம் இலக்க திறமுறை அபிவிருத்திக் கருத்திட்ட (திருத்த) சட்டத்தின் கீழ் உரிய நடவடிக்கைகளை எடுப்பதற்காக முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சர் மாண்புமிகு லக்‌ஷ்மன் யாப்பா அபேவர்த்தன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.