• Increase font size
  • Default font size
  • Decrease font size

2014-05-08 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
பாதரசம் தொடர்பில் மினாமாட்டா சமவாயத்தில் கைச்சாத்திடல்

- நீண்ட காலமாக பாதரசம் சுற்றுச்சூழலுக்கு விடுவிக்கின்றமை காரணமாக மனிதர்களின் சுகாதாரத்திற்கும் சுற்றாடல் முறைமைக்கும் உலகலாவிய ரீதியில் பிரதிகூலமான பாதிப்புகள் ஏற்பட்டுள்ளமை கவனத்திற்குக் கொள்ளப்பட்டது. மேற்போந்த சமவாயத்தின் பிரதான நோக்கமாவது இந்த பாதரசம் வளி, நீர் மற்றும் நிலத்திற்கு விடுவிப்பதைக் குறைப்பதன் மூலம் மனித சுகாதாரத்திற்கும் உலக சூழலுக்கும் எதிராக பாதரசம் மூலம் உருவாகும் பிரதிகூலமான பாதிப்புகளிலிருந்து பாதுகாப்பதாகும். சுற்றாடல், மீள் புதுப்பித்தல் சக்தி அமைச்சர் மாண்புமிகு சுசில் பிரேமஜயந்த அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்பு சம்பந்தமாக விரிவாக ஆராய்ந்து பரிசீலனை செய்யும் பொருட்டு அறிக்கையொன்றைச் சமர்ப்பிப்பதற்காக இயைபுள்ள அமைச்சுக்களிலிருந்தும் திணைக்களங்களிலிருந்தும் பிரதிநிதி ஒருவர் வீதம் அடங்கிய குழுவொன்றை நியமிப்பதற்கு அமைச்சரவையினால் தீர்மானிக்கப்பட்டது.