• Increase font size
  • Default font size
  • Decrease font size

2014-05-08 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
அதிமேதகைய சனாதிபதியின் விசேட பிரதிநிதியாக பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் மாண்புமிகு பசில் ராஜபக்ஷ அவர்கள் சுற்றாடல், மீள் புதுப்பித்தல் சக்தி அமைச்சர் மாண்புமிகு சுசில் பிரேமஜயந்த அவர்களுடன் கொரிய குடியரசுக்கு மேற்கொண்ட உத்தியோகபூர்வ விஜயம்

- அதிமேதகைய சனாதிபதியின் விசேட பிரதிநிதியாக கொரிய குடியரசுக்கு மேற்கொண்ட உத்தியோகபூர்வ விஜயம் தொடர்பில் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் மாண்புமிகு பசில் ராஜபக்ஷ அவர்களினால் அமைச்சரவைக்கு விடயத் தெளிவுபடுத்துகை செய்யப்பட்டது. பொருளாதார உறவுகளை மேலும் ஒன்றிணைத்தல் முக்கியமாக தற்போது செயற்படுத்தப்பட்டுவரும் பொருளாதார நிகழ்ச்சித் திட்டத்திற்கும் தொழினுட்ப, மனிதவள அபிவிருத்தி தொடர்பிலும் இருநாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பை பலப்படுத்திக் கொள்ளல் இந்த விஜயத்தின் நோக்கமாகுமென அமைச்சர் அவர்கள் குறிப்பிட்டார். ஏற்கனவே நடைமுறையில் உள்ள கருத்திட்டங்களைத் துரிதப்படுத்துவதற்கும் வசதிகளை வழங்குதல் மற்றும் கடன் உதவிப் பொதிகள் ஆகியவற்றின் மூலம் கொரிய நாட்டு முதலீட்டாளர்களே இலங்கையில் மூதலீடு செய்வதற்கு ஊக்குவிப்பதற்கு கொரிய அரசாங்கம் விருப்பம் தெரிவித்ததெனவும் அவர் குறிப்பிட்டார். 2008 ஆம் ஆண்டிலிருந்து 2012 ஆம் ஆண்டு வரையிலான காலப்பகுதியில் கொரிய அரசாங்கத்தினால் 340 மில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர்களை வழங்கியுள்ளதெனவும் 2015 ஆம் ஆண்டு வரை மேலும் 290 மில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர்களை வழங்கவுள்ளதாகவும் நாட்டில் கணிசமான அந்நிய செலாவணியை ஈட்டிக் கொடுத்து சுமார் 25,000 இலங்கை தொழிலாளர்களுக்கு கொரியாவில் தொழில் பார்க்கின்றார்களெனவும் அமைச்சரவையினால் கவனத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.