• Increase font size
  • Default font size
  • Decrease font size

2014-05-08 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
இலங்கைக்கும் பங்களாதேசுக்கும் இடையில் பொருளாதார உறவுகளை மேலும் விரிவுபடுத்துவதற்கு சாத்திய தகவாய்வொன்றை செய்வதற்காக கற்கை குழுவொன்றைத் தாபித்தல்

- இலங்கைக்கும் பங்களாதேசுக்கும் இடையில் இருபக்க வர்த்தகத்தை விரிவுபடுத்தும் நோக்கில் பங்களாதேசுடன் சுதந்திர வர்த்தக உடன்படிக்கையொன்றை அல்லது முன்னுரிமை வர்த்தக உடன்படிக்கையொன்றை செய்து கொள்வது பற்றி சாத்திய தகவாய்வொன்றை மேற்கொள்ளும் பொருட்டு இயைபுள்ள நிறுவனங்களின் பிரதிநிதிகளைக் கொண்ட கற்கைக் குழுவொன்றை நியமிப்பதற்காக கைத்தொழில், வர்த்தக அலுவல்கள் அமைச்சர் .மாண்புமிகு அப்துல் றிஷாத் பதியுதீன் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது