• Increase font size
  • Default font size
  • Decrease font size

2014-05-08 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
2007 ஆம் ஆண்டின் 07 ஆம் இலக்க கம்பனிகள் சட்டத்துடனும் 2005 ஆம் ஆண்டின் 11 ஆம் இலக்க சங்கங்கள் (திருத்த) கட்டளைச் சட்டத்துடனும் சேர்த்து வாசிக்கப்பட வேண்டிய 1891 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்க (123 ஆம் அத்தியாயம்) சங்கங்கள் கட்டளைச் சட்டத்தின் கீழ் ஆக்கப்பட்ட கட்டளைகள்

- 2013‑12‑18 ஆம் திகதியிடப்பட்டதும் 1841/8 ஆம் இலக்கத்தைக் கொண்டதுமான அதிவிசேட வர்த்தமானியிலும் 2014‑01‑27 ஆம் திகதியிடப்பட்டதும் 1847/2 ஆம் இலக்கத்தைக் கொண்டதுமான அதிவிசேட வர்த்தமானியிலும் பிரசுரிக்கப்பட்ட கம்பனிகள் பதிவாளர் திணைக்களத்தினால் வழங்கப்படும் சேவைகள் தொடர்பில் அறவிடப்படும் புதிய கட்டணங்களை விதித்துரைக்கும் கட்டளைகளை பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்காக கைத்தொழில், வர்த்தக அலுவல்கள் அமைச்சர் மாண்புமிகு அப்துல் றிஷாத் பதியுதீன் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.