• Increase font size
  • Default font size
  • Decrease font size

2014-05-08 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் மலேசியாவின் Hyrax Oil SDN BHD கம்பனியுடன் இணைந்து உராய்வு நீக்கி எண்ணெய்களைக் கலக்கும் தொழிற்சாலையொன்றை இலங்கையில் தாபித்தல்

- பெற்றோலியக் கைத்தொழில்கள் அமைச்சு உள்நாட்டு சந்தைக்கும் அதேபோன்று ஏற்றுமதி சந்தைக்கும் உராய்வு நீக்கி எண்ணெய்களை வழங்குவதற்காக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்கும் மலேசியாவின் Hyrax Oil SDN BHD கம்பனிக்கும் இடையில் கூட்டுத்தொழில்முயற்சியொன்றாக 9 மில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர்களைக் கொண்ட முதலீட்டில் உராய்வு நீக்கி எண்ணெய்களைக் கலக்கும் தொழிற்சாலையொன்றை இலங்கையில் தாபிப்பதற்காக எதிர்பார்க்கப்படுகின்றது. இதற்குரிய தொடர் நடவடிக்கைகளை எடுப்பதற்காக பெற்றோலியக் கைத்தொழில்கள் அமைச்சர் மாண்புமிகு அநுர பிரியதர்ஷன யாப்பா அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.