• Increase font size
  • Default font size
  • Decrease font size

2014-04-22 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
பெரும்பாக கொழும்பு கழிவுநீர் முகாமைத்துவக் கருத்திட்டம் - நிதியுதவி - ஆசிய அபிவிருத்தி வங்கி - கொழும்பு மாநகர சபை எல்லைக்குள் அமைந்துள்ள 10 கி.மீ. கழிவுநீர் குழாய்வழியை புனரமைத்தலும் 12.5 கி.மீ தூர கழிவுநீர் குழாய் வழியின் தரவு ஆய்வு அறிக்கையைத் தயாரித்தலும்

- பெரும்பாக கொழும்பு கழிவுநீர் முகாமைத்துவக் கருத்திட்டத்திற்காக ஆசிய அபிவிருத்தி வங்கியினால் 116.63 மில்லியன் அமெரிக்க டொலர்கள் கடனாக இலங்கை அரசாங்கத்திற்கு கிடைத்துள்ளது. அமைச்சரவையினால் நியமனஞ் செய்யப்பட்ட நிலையியல் கொள்வனவுக் குழுவினால் சிபாரிசு செய்யப்பட்டுள்ளவாறு மேலே குறிப்பிடப்பட்டுள்ள ஒப்பந்தத்தை வழங்குவதற்காக உள்ளூராட்சி, மாகாண சபைகள் அமைச்சர் மாண்புமிகு ஏ.எல்.எம்.அதாவுல்லா அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது .