• Increase font size
  • Default font size
  • Decrease font size

2014-04-22 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
உள்நாட்டு மற்றும் இறக்குமதி விதைகளின் தரம் பரிசீலிக்கப்படும் போது தேவைப்படும் சர்வதேச விதை பரிசோதனைச் சங்கத்தின் உறுப்புரிமையைப் பெற்றுக் கொள்ளல்

- சர்வதேச விதை பரிசோதனைச் சங்கம் எனப்படுவது விதை பரிசோதனை தொடர்பில் நடவடிக்கைகளை எடுத்து இதன் ஆய்வுகளின் பெறுபேறுகளை தங்களது அங்கத்துவ நாடுகளுக்கிடையே பகிர்ந்தளித்து இதன் மூலம் அவர்களுக்கு ஒரே முறையான விதை பரிசோதனையே உறுதிப்படுத்திக் கொள்வதற்கு வாய்ப்பளிக்கும் உலகலாவிய ஏற்றுக் கொள்ளும் தன்மையைக் கொண்ட நிறுவனமாகும். இதற்கான வருடாந்த அங்கத்துவக் கட்டணத்தைச் செலுத்துவதற்காக கமத்தொழில் அமைச்சர் மாண்புமிகு மஹிந்த யாப்பா அபேவர்த்தன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது .