• Increase font size
  • Default font size
  • Decrease font size

2014-04-22 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
காலி றிச்மன்ட் கல்லூரியின் விளையாட்டுத்தொகுதி அடங்கலாக ஏனைய அபிவிருத்தி நோக்கங்களுக்காக காணியொன்றை உடைமையாக்குதல்

- 4,400 மாணவர்களைக் கொண்ட காலி றிச்மன்ட் கல்லூரி தென் மாகாணத்தின் முக்கியமானதொரு தேசிய பாடசாலையாகும். காலி றிச்மன்ட் கல்லூரியின் விளையாட்டுத்தொகுதியை நிருமாணிப்பதற்கு தெற்கு அபிவிருத்தி அதிகாரசபைக்குரிய கரதூவவத்த என்னும் காணியிலிருந்து காணித் துண்டொன்றை இறையிலி கொடையாக கல்வி அமைச்சிற்கு உடைமையாக்குவதற்காக கல்வி அமைச்சர் மாண்புமிகு பந்துல குணவர்த்தன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது .