• Increase font size
  • Default font size
  • Decrease font size

2014-04-22 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
தேசிய மனிதவளங்கள், தொழில் வாய்ப்பு கொள்கைக்கான பிரதான திட்டத்தை நடைமுறைப்படுத்துதல்

- தேசிய மனிதவள, தொழில் வாய்ப்பு கொள்கை மனித வள அபிவிருத்தி நோக்கங்கள் மற்றும் இலங்கையில் ஆண் பெண் இருபாலருக்கும் பயனுள்ள வகையிலும் சுதந்திரமாகவும் தெரிவுசெய்த தொழில்களை வழங்கும் பொருட்டு எடுக்கப்படும் செயற்பாடுகளை கட்டுப்படுத்தும் அரசாங்கத்தின் கொள்கை ரீதியான கட்டமைப்பாகுமென்பதுடன், இதன் மூலம் மனிதவள அபிவிருத்தியின் போதும் தொழில் மேம்பாட்டு பணிகளின் போதும் ஏற்புடையதான அதேபோன்று முக்கியமானதுமான பல விசேட துறைகளையும் தழுவுகின்றது. இந்த நோக்கத்திற்காக வகுத்தமைக்கப்பட்டுள்ள பிரதான திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கும் இதற்குரியதான தொடர் நடவடிக்கைகளை எடுப்பதற்குமாக மனித வளங்கள் பற்றிய (சிரேட்ட) அமைச்சர் மாண்புமிகு டி.ஈ.டபிள்யு.குணசேக்கர அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது .