• Increase font size
  • Default font size
  • Decrease font size

2014-04-03 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
உள்நாட்டு ஒப்பந்தக்கார்கள் மூலமாக தேசிய நெடுஞ்சாலைகளின் புனரமைப்பிற்காக உள்நாட்டு வங்கிகளினால் நிதியளிக்கப்படும் நிகழ்ச்சித்திட்டம் - கட்டம் - 2 இன் கீழ் 8 ஒப்பந்தங்களை வழங்குவதற்கு அங்கீகாரம் கோரல்

- அமைச்சரவையினால் நியமனஞ் செய்யப்பட்ட நிலையியல் கொள்வனவுக் குழுவினால் சிபாரிசு செய்யப்படுள்ளவாறு பின்வரும் வீதிப் பகுதிகளை புனரமைப்பதற்கான ஒப்பந்தத்தை வழங்குவதற்காக துறைமுகங்கள், நெடுஞ்சாலைகள், கப்பற்றுறை அமைச்சராக அதிமேதகைய சனாதிபதி அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது :
* பழைய கொழும்பு - காலி (A2) வீதியின் 17.50 கிலோ மீற்றர் தொடக்கம் - 25.20 கிலோ மீற்றர் வரையிலான பகுதி;
* பிபில - ஊரனிய - மஹியங்கனை (B57) வீதியின் 0.00 கிலோ மீற்றர் தொடக்கம் 10.00 கிலோ மீற்றர் வரையிலான பகுதி;
* பிபில - ஊரனிய - மஹியங்கனை (B57) வீதியின் 18.00 கிலோ மீற்றர் தொடக்கம் 22.00 கிலோ மீற்றர் வரையிலான பகுதி;
* மல்லவபிட்டிய - ரம்பொடகல்ல - கெப்பிட்டிபொல (B264) வீதியின் 0.00 கிலோ மீற்றர் தொடக்கம் 10.00 கிலோ மீற்றர் வரையிலான பகுதி;
* மல்லவபிட்டிய - ரம்பொடகல்ல - கெப்பிட்டிபொல (B264) வீதியின் 10.00 கிலோ மீற்றர் தொடக்கம் 15.75 கிலோ மீற்றர் வரை மற்றும் 20.25 கிலோ மீற்றர் தொடக்கம் 37.81 கிலோ மீற்றர் வரையிலான பகுதி;
* எம்பிலிபிட்டிய - மொறகெட்டிய - கிரிஇப்பன்ஆர - உடமவ்ஆர (B549) வீதியின்- 6.12 கிலோ மீற்றர் தொடக்கம் 14.84 கிலோ மீற்றர் வரையிலான பகுதி;
* வெலிகத்த - புத்தள - கிரிந்த வீதியின் 0.00 கிலோ மீற்றர் தொடக்கம் 19.20 கிலோ மீற்றர் வரையிலான பகுதி;
* தங்காலை - கதுறுபொக்குன - பெலியத்த - கதுறுபொக்குன - தெத்துவாவெல வீதியின் 0.00 கிலோ மீற்றர் தொடக்கம் 12.76 கிலோ மீற்றர் வரையிலான பகுதி.