• Increase font size
  • Default font size
  • Decrease font size

2014-04-03 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
சமூக மாற்றம் மற்றும் ஒருங்கிணைப்பு கருத்திட்டத்திற்காக வசதியளித்தல் (FLICT) கருத்திட்டத்தை நடாத்திச் செல்லல்

- தேசிய மொழிகள், சமூக ஒருங்கிணைப்பு அமைச்சு தனிநபர்களின் மற்றும் கூட்டு உரிமைகளை பாதுகாக்கும் அத்துடன் ஒருவரை ஒருவர் மதிக்கும் வளர்ச்சியடைந்த மற்றும் சமூகமென்றவகையில் ஒருங்கிணைந்த மும்மொழி சமூகமொன்றை கட்டியெழுப்பும் கொள்கையொன்றை வகுத்தமைத்தல், வழிகாட்டுதல், வசதிகளை வழங்குதல் அத்துடன் இணைத்துக்கொள்ளல் போன்ற செயற்பணியோடு இணைந்து 2004 ஆம் ஆண்டு தொடக்கம் அதாவது, இதன் ஆரம்பம் தொடக்கம் சமூக மாற்றம் மற்றும் ஒருங்கிணைப்பு கருத்திட்டத்திற்காக வசதியளித்தல் (FLICT) கருத்திட்டத்துடன் சேர்ந்து நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. கருத்திட்டத்தின் இறுதிக்கட்டம் பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் அபிவிருத்தி தொடர்பிலான ஜேர்மன் அமைச்சினால் 2.5 மில்லியன் யூரோவும் ஐரோப்பா ஆணைக்குழுவினால் 899,158.40 யூரோவுமாக 3.399,158.40 யூரோக்களைக் கொண்ட கூட்டுப் பங்களிப்புடன் நடாத்திச் செல்லப்படவுள்ளது. இந்த நோக்கத்திற்கான செயற்பாட்டுத் திட்டத்தை நடைமுறைப்படுத்தும் பொருட்டு தேசிய மொழிகள், சமூக ஒருங்கிணைப்பு அமைச்சர் மாண்புமிகு வாசுதேவ நாணயக்கார அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.