• Increase font size
  • Default font size
  • Decrease font size

2014-04-03 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
வீடமைப்பு மற்றும் நிலைபேறுடைய நகர அபிவிருத்தி தொடர்பிலான ஐக்கிய நாடுகளின் மூன்றாவது மாநாடு (Habitat III) 2016

- வீடமைப்பு மற்றும் நிலைபேறுடைய நகர அபிவிருத்தி தொடர்பிலான ஐக்கிய நாடுகளின் மூன்றாவது மாநாடு (Habitat III) 2016 ஆம் ஆண்டில் நடாத்தப்படவுள்ளது. இந்த மாநாட்டில் இந்த அமைப்பின் உறுப்பாண்மை நாடுகளின் வீடமைப்புக்குப் பொறுப்பான மாண்புமிகு அமைச்சர்களும் இயைபுள்ள நாடுகளின் நாட்டுத் தலைவர்களின் பங்களிப்புடனும் 20 வருடங்களுக்கு ஒருமுறை நடாத்தப்படுகின்றது. இலங்கையில் நடைமுறைப்படுத்தப்படவுள்ள சகல நடவடிக்கைகளையும் ஒழுங்குபடுத்தும் பொருட்டும் இந்த மாநாட்டில் சமர்ப்பிக்கப்படவுள்ள அறிக்கையை தயாரிக்கும் பொருட்டும் இயைபுள்ள அமைச்சுக்களின் செயலாளர்களையும் நிறுவனத் தலைவர்களையும் கொண்ட தேசிய தொழிற்பாட்டுக் குழுவொன்றை நியமிப்பதற்கு நிருமாண, பொறியியல்சேவைகள், வீடமைப்பு, பொது வசதிகள் அமைச்சர் மாண்புமிகு விமல் வீரவங்ச அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.