• Increase font size
  • Default font size
  • Decrease font size

2014-04-03 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
பிரேரிக்கப்பட்டுள்ள தேசிய ஔடதங்கள், உபகரணங்கள் மற்றும் ஒப்பனைப் பொருட்கள் ஒழுங்குறுத்தல் அதிகாரசபை சட்டமூலம்

- தேசிய ஔடதங்கள், உபகரணங்கள் மற்றும் ஒப்பனைப் பொருட்கள் ஒழுங்குறுத்தல் அதிகாரசபையொன்றை தாபிப்பதற்கான சட்டமூலம் சுகாதார அமைச்சர் மாண்புமிகு மைத்திரிபால சிறிசேன அவர்களினால் அமைச்சரவைக்குச் சமர்ப்பிக்கப்பட்டது. இந்த அதிகாரசபையைத் தாபிப்பதற்கான பிரதான நோக்கங்களாவன:

* பாதுகாப்பானதும் சிறந்த தரத்தைக் கொண்டதுமான ஔடதங்களையும் பாதுகாப்பான, பயனுள்ள, அங்கீகரிக்கப்பட்ட தரத்தைக் கொண்டதுமான ஒப்பனைப் பொருட்களையும் நியாயமான விலைகளில் பொது மக்களுக்கு கிடைப்பதை உறுதிப்படுத்துதல்;

* ஔடதங்கள், உபகரணங்கள் மற்றும் ஒப்பனைப் பொருட்களின் இறக்குமதி, உற்பத்தி, களஞ்சியப்படுத்தல், விற்பனை, விநியோகம் மற்றும் அதனோடிணைந்த சகல பணிகளிலும் மையப்படுத்தப்பட்ட கட்டுப்பாட்டாளராக செயற்படுதல்;

* சுகாதார துறைக்கும் பொது மக்களுக்கும் பெற்றுக் கொள்வதற்கு பாதுகாப்பான சிறந்த தரத்தைக் கொண்ட ஔடதங்கள் மாத்திரம் உள்ளமை பற்றி தேசிய ஔடத தரச்சான்றிதழுக்கான விஞ்ஞானகூடங்கள் மூலமும் பிற ஏற்றுக் கொள்ளப்பட்ட விஞ்ஞானகூடங்கள் மூலமும் வழங்கப்படுகின்ற சேவைகள் மூலம் உறுதிப்படுத்துதல்;

* ஔடதங்கள், உபகரணங்கள் மற்றும் ஒப்பனைப் பொருட்கள் இறக்குமதி மற்றும் பதிவு செய்தல் தொடர்பிலான சகல நடவடிக்கைகளும் வெளித்தெரியும் வண்ணம் மேற்கொள்ளப்படுகின்றமை பற்றி உறுதிப்படுத்திக் கொள்ளல்; அத்துடன்

* இலங்கைக்குள் ஔடத உற்பத்தியை மேம்படுத்துதலும் ஊக்கப்படுத்துதலும்.

இந்த சட்டமூலத்திற்கான சிபாரிசுகளைப் பெறும் பொருட்டு முதலில் சட்டவாக்கம் பற்றிய அமைச்சரவை உபகுழுவுக்கு தொடர்புபடுத்துவதற்கும் அமைச்சரவையினால் தீர்மானிக்கப்பட்டது.