• Increase font size
  • Default font size
  • Decrease font size

2014-04-03 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
இரசாயன பசளை மற்றும் கம இரசாயன பொருட்களின் முறையற்ற விதத்திலான பாவனையும் சிறுநீரக நோய் மற்றும் கம இராசாயனப் பொருட்கள் தொடர்பிலான பாராளுமன்ற ஆலோசனைக் குழுவின் சிபாரிசுகளை நடைமுறைப்படுத்துவதற்காக தயாரிக்கப்பட்ட செயற்பாட்டுத் திட்டமும்

- நிதி, திட்டமிடல் அமைச்சரினாலும் தொழினுட்ப, ஆராய்ச்சி அமைச்சரினாலும் நிருமாண, பொறியியல்சேவைகள், வீடமைப்பு, பொது வசதிகள் அமைச்சரினாலும் கமத்தொழில் அமைச்சரினாலும் விசேட கருத்திட்டங்கள் அமைச்சரினாலும் இது தொடர்பில் சமர்ப்பிக்கப்பட்ட அவதானிப்புரைகளை கவனத்திற்கு எடுத்துக் கொண்டு, இந்த நோக்கத்திற்காக வகுத்தமைக்கப்பட்ட செயற்பாட்டுத் திட்டத்தில் உள்ளடக்கப்பட்டுள்ள முன்னுரிமைத் துறைகளை இனங்காண்பதையும் முன்னுரிமை அடிப்படையில் பிரேரிப்புகளைத் துரிதமாக செயற்படுத்துவதையும் உறுதிப்படுத்தும் பொருட்டு சனாதிபதி செயலணியொன்றை நியமிப்பதற்கு அமைச்சரவையினால் தீர்மானிக்கப்பட்டது.