• Increase font size
  • Default font size
  • Decrease font size

2014-03-20 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் சபையில் அனந்தி ஆற்றிய உரை

- பாரம்பரிய கைத்தொழில்கள், சிறுதொழில்முயற்சிகள் அபிவிருத்தி அமைச்சராகிய மாண்புமிகு டக்ளஸ் தேவானந்தா அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட மேற்போந்த குறிப்பின் மூலம் எல்ரீரீஈ அமைப்பின் சார்பில் வலுக்கட்டாயமாக சிறுவர்களை இணைத்துக் கொள்வதில் மிக ஊக்கத்துடன் செயலாற்றிய ஒருவராக நம்பப்படும் முன்னாள் எல்ரீரீஈ செயற்பாட்டாளர் ஒருவரான எழிலனின் மனைவியாகிய திருமதி அனந்தி சசிதரனினால் அரச சார்பற்ற சருவதேச அமைப்புகள் இரண்டிற்கு ஒதுக்கப்பட்ட நேரத்தை பயன்படுத்தி, அரசாங்கத்திற்கு அவப்பெயரை உண்டுபண்ணுவதற்கும் தற்போது ஜெனீவா கூட்டத்தொடரில் தம்பால் சருவதேச சமூகத்தின் அனுதாபத்தை பெறுவதற்குமாக வட மாகாணத்தில் நிலவும் உண்மை நிலையை முற்றுமுழுதாக திரிபுபடுத்தி அரசாங்கத்திற்கு எதிராக உண்மைக்குப் புறம்பான குற்றச்சாட்டுக்களை முன்வைத்து ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் சபையில் பழிசுமத்தி ஆற்றிய உரை பற்றி அமைச்சரவையின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டது. அமைச்சரவையானது இந்த விடயம் பற்றி கவலையைத் தெரிவித்ததோடு, இலங்கையிலும் வெளிநாடுகளிலுமுள்ள இராஜதந்திர தூதரகங்கள் ஊடாக இலங்கையின் வடமாகாணத்தில் நிலவும் உண்மை நிலைபற்றி சருவதேச சமூகத்திற்கு அறியச் செய்வதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு வெளிவிவகார அமைச்சரிடம் கோரிக்கை விடுப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டது.