• Increase font size
  • Default font size
  • Decrease font size

2014-03-20 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
கொரிய பொருளாதார அபிவிருத்தி ஒத்துழைப்பு நிதியத்தினால் நிதியளிக்கப்படும் ஹட்டன் - நுவரெலிய வீதியை மேம்படுத்தும் கருத்திட்டம் - சிவில் வேலை ஒப்பந்தத்திற்கான மாற்றமொன்றைச் செய்தல்

- அவிசாவளை - ஹட்டன் - நுவரெலிய (A7) வீதியின் ஹட்டன் - நுவரெலிய பகுதியை (46.75 கிலோ மீற்றர்) அபிவிருத்தி செய்வதற்கான செலவுகளை ஏற்கும் பொருட்டு 40 மில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர்கள் கொண்ட கடன் தொகையொன்று கொரிய பொருளாதார அபிவிருத்தி ஒத்துழைப்பு நிதியத்திடமிருந்து இலங்கை அரசாங்கத்திற்கு கிடைத்துள்ளது. ஆரம்ப கருத்திட்ட பிரேரணைக்குச் சேர்க்கப்படும் மாற்றங்களில் நானுஓயா புகையிரத கடவை அமைந்துள்ள இடத்தில் நிலக்கீழ் பாதையொன்றை நிருமாணித்தலும் கொட்டகல குகைப்பாதையை நிருமாணித்தலும் முக்கியமானதாகும். அமைச்சரவையினால் நியமனம் செய்யப்பட்ட நிலையியல் கொள்வனவுக் குழுவினால் சிபாரிசு செய்யப்பட்டுள்ளவாறு ஆரம்ப ஒப்பந்தத்தின் செலவினைத் திருத்துவதற்கும் வேலைகளைப் பூர்த்தி செய்யும் திகதி 2014‑06‑01 ஆம் திகதியிலிருந்து 2015‑03‑02 ஆம் திகதிவரை நீடிப்பதற்காக துறைமுகங்கள், நெடுஞ்சாலைகள், கப்பற்றுறை அமைச்சராக அதிமேதகைய சனாதிபதி அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.