• Increase font size
  • Default font size
  • Decrease font size

2014-03-20 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் பட்டப்பின்படிப்பு பீடத்திற்கு புதிய கட்டடமொன்றை நிருமாணித்தல்

- கேட்போர்கூடம், நூலகம், விரிவுரை மண்டபம், நிருவாக பிரதேசம் என்பன உள்ளடக்கப்பட்டு 06 மாடிகளைக் கொண்ட கட்டடமொன்றை நிருமாணிப்பது இந்த கருத்திட்டத்திற்கு உரியதாகும். இந்த ஒப்பந்தம் அமைச்சரவையினால் நியமனம் செய்யப்பட்ட நிலையியல் கொள்வனவுக் குழுவினால் சிபாரிசு செய்யப்பட்டுள்ளவாறு ஆகக் குறைந்த அனுசரணை மதிப்பீட்டு விலையை முன்வைத்த கேள்விதாரரான மத்திய பொறியியல் உசாத்துணைப் பணியகத்திற்கு வழங்குவதற்காக பாதுகாப்பு, நகர அபிவிருத்தி அமைச்சராக அதிமேதகைய சனாதிபதி அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.