• Increase font size
  • Default font size
  • Decrease font size

2014-03-20 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
"கித்துலக்க வருண” கண்காட்சியும் விற்பனையும் - 2014 ஏப்ரல் 01 ஆம் திகதியிலிருந்து ஆரம்பமாகும் கித்துல் மேம்பாட்டு நுகர்வு வாரத்தினை பிரகடனப்படுத்துதல்

- ஒவ்வொரு ஆண்டும் சிங்கள, இந்து புதுவருட பிறப்புக்கு முன்னர் கித்துல் உற்பத்திகளை பிரபல்யப்படுத்துவதற்கும் மேம்படுத்துவதற்குமாக "கித்துலக்க வருண” கண்காட்சியும் விற்பனையும் நடாத்தப்படும். தேசிய கித்துல் அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டம் என்பது கித்துல் துறையை பலப்படுத்தல், ஒத்துழைப்பு நல்குதல், மேம்படுத்துதல், அந்நிய செலாவணியை ஈட்டும் ஆற்றலை பயன்படுத்துதல் என்பன பாரம்பரிய கைத்தொழில்கள், சிறுதொழில்முயற்சிகள் அபிவிருத்தி அமைச்சின் ஊடாக பொறுப்பேற்றுள்ள முக்கிய அபிவிருத்தி நோக்கங்களாகும். இந்த நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளின் மூலம் 2011 ஆம் ஆண்டில் 24 மில்லியன் ரூபாவாக இருந்த கித்துல்பாணி மற்றும் கருப்பட்டி ஏற்றுமதி வருமானம் 2012 ஆம் ஆண்டில் 58 மில்லியன் ரூபாவாகவும் 2013 ஆம் ஆண்டில் 68 மில்லியன் ரூபாவாகவும் அதிகரிப்பதற்கு உதவியாக அமைந்தது. 2014 ஏப்ரல் 01 ஆம் திகதியிலிருந்து 06 ஆம் திகதிவரை ஏப்ரல் மாதத்தின் ஆரம்ப வாரத்தில் கித்துல் மேம்பாட்டு, நகர்வு வாரமாகப் பிரகடனப்படுத்துவதற்கும் இந்த நோக்கத்திற்காக திட்டமிடப்பட்டுள்ள இயைபுள்ள நிகழ்ச்சித் திட்டங்களை செயற்படுத்துவதற்குமாக பாரம்பரிய கைத்தொழில்கள், சிறுதொழில்முயற்சிகள் அபிவிருத்தி அமைச்சர் மாண்புமிகு டக்ளஸ் தேவானந்தா அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.