• Increase font size
  • Default font size
  • Decrease font size

2014-02-28 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
கருத்திட்டமல்லாத யப்பான் மானிய உதவியின் கீழ் உயர் தரத்திலான யப்பான் உற்பத்திகளை (மருத்துவ உபகரணங்கள் மற்றும் நலனோம்பல் உபகரணங்கள்) உற்பத்தி செய்வதற்காக 625 மில்லியன் ரூபாவைக் கொண்ட (யப்பான் யென் 500 மில்லியன்) மானியம்

- இலங்கை பிரசைகளின் ஆரோக்கிய நிலைமையை மேம்படுத்தும் நோக்கில் உயர்தரத்திலான யப்பான் உற்பத்திகளை (மருத்துவ உபகரணங்கள் மற்றும் நலனோம்பல் உபகரணங்கள்) வழங்களுக்கான கருத்திட்டம் சாராத மானிய அடிப்படையின் கீழ் 500 மில்லியன் யப்பான் யென் (அண்ணளவாக 625 மில்லியன் ரூபா) மானியத்தை வழங்குவதற்கு யப்பான் அரசாங்கம் ஒத்துக்கொண்டுள்ளது. மேற்போந்த நோக்கத்திற்காக யப்பான் அரசாங்கத்துடன் பரிமாற்றுப் பத்திரங்களில் கைச்சாத்திடுவதற்கு நிதி, திட்டமிடல் அமைச்சராக அதிமேதகைய சனாதிபதி அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.