• Increase font size
  • Default font size
  • Decrease font size

2014-02-28 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
யப்பான் சருவதேச ஒத்துழைப்புக்கான நிறுவனத்தினால் நிதியளிக்கப்படும் தேசிய நெடுஞ்சாலை வலையமைப்பின் மண்சரிவு அனர்த்தத்தை தடுக்கும் கருத்திட்டம் - பரிசோதனை மேற்கொள்ளல், விரிவான திட்டங்கள், நிருமாணிப்பு மேற்பார்வை ஆகியவற்றுக்கான மதியுரைச் சேவை ஒப்பந்தத்தை வழங்குவதற்கு அங்கீகாரம் கோரல்

- தேசிய நெடுஞ்சாலை வலையமைப்பின் மண்சரிவு அனர்த்த பாதுகாப்பு கருத்திட்டத்தின் செலவினை ஏற்பதற்காக யப்பான் அரசின் கடன் வழங்கும் நிறுவனமான யப்பான் சருவதேச ஒத்துழைப்புக்கான நிறுவனத்தினால் இலங்கை அரசாங்கத்திற்கு 7,619 மில்லியன் யப்பான் யென் நிதி கிடைத்துள்ளது. இந்தக் கருத்திட்டத்தின் பிரதான நோக்கமானது மலைநாட்டு பிரதேசங்களில் இவ்வாறான அனர்த்தத்தை தடுக்கும் பொருத்தமான நடவடிக்கைகளை மேற்கொள்வதன் மூலம் அடிப்படை உட்கட்டமைப்பு வசதிகளாக "A” வகுப்பைச் சேர்ந்த தேசிய வீதிகளை இலக்கு வைத்து அவற்றில் இவ்வாறான மண்சரிவு அனர்த்தங்கள் நிகழ்வதை குறைப்பதாகும். அமைச்சரவையினால் நியமனஞ் செய்யப்பட்ட நிலையியல் கொள்வனவுக் குழுவினால் சிபாரிசு செய்யப்பட்டுள்ளவாறு மேற்போந்த ஒப்பந்தத்தை வழங்குவதற்காக துறைமுகங்கள், நெடுஞ்சாலைகள், கப்பற்றுறை அமைச்சராக அதிமேதகைய சனாதிபதி அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.